சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

வெளி மாவட்டங்களில் இருந்து லாரியில் ஆள்களை ஏற்றி வந்தால் கடும் நடவடிக்கை - காவல்துறையினர் எச்சரிக்கை.

 


 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடையோர் சென்னையையடுத்த திருவேற்காட்டில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு கார் ஓட்டுநர் உள்பட 6  பேருடன் கோவில்பட்டிக்கு 6ந்தேதி வந்துள்ளனர். தகவல் தெரிந்தவுடன் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் அவரது இல்லத்திற்கு சென்று அவர்களை தனிமையாக இருக்க அறிவுறுத்தியதோடு மட்டுமின்றி அதற்கான ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டது.

 

இந்நிலையில், கோவில்பட்டியில் இருந்து வந்த 5  பேரில் இருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை செய்யப்பட்டதில், 65 வயதுடைய முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. இதையடுத்து, வருவாய் துறையினர், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர்சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுபோல, சென்னையையடுத்த பெரம்பூரில் உள்ள மார்க்கெட்டில் வேலை செய்து வந்த ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மற்றும் நாங்குநேரியைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் ஆகிய இருவரும் லாரியில் ஆழ்வார்திருநகரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

 

தூத்துக்குடி மாவட்ட எல்கை தோட்டிலோவன்பட்டி விலக்கில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் இம்மாதம் 7ஆம் தேதி காலை நடத்திய ஆய்வில் எவ்வித அனுமதியும் இன்றி லாரியில் வந்ததை கண்டறிந்த போலீஸார் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.  பின்னர் அவர்களது மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில்,  ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. அதையடுத்து, இளைஞரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

 

காவல் துறை அறிவிப்பு:

 

வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் லாரிகளில் உரிய அனுமதியின்றி யாரையும் ஏற்றிச் செல்லக் கூடாது. அதை மீறி ஏற்றி வருபவர்களில் லாரி பறிமுதல் செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Previous Post Next Post