நான்காவது ஊரடங்கு நிச்சயம்...பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடியில் நிவாரண தொகுப்பு... பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரை

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதற்காக தற்காப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 3 வது முறை நீட்ட்டிக்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.


இதையொட்டி இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சிகள் மூலம் உரையாற்றினார்.


இந்த உரை நாடு முழுவதும், ஊரடங்கு குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.



பிரதமர் மோடி பேசியது: 


ஒரே ஒரு வைரஸ் நமது வாழ்க்கையை பெருமளவு பாதித்து உள்ளது. 


ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. உலகம் முழுவதும் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.


கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம்.போராட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல.


மனித நேயம் தோற்பதில்லை. நாம் நம்மை நாமே காத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். 


உலகத்திற்கு தன்னம்பிக்கையை நாம் அளித்துள்ளோம். உலகமே ஒரு குடும்பம் என்பதை நமது கலாச்சாரம் உணர்த்தி உள்ளது.


தினமும் 2 லட்சம் பி.பி.இ கிட் தயாரிக்கும் நாடாகவும், என்.95 மாஸ்க் தயாரிக்கும் நாடாகவும் தற்போது நாம் இருக்கிறோம்.


இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டு. தற்சார்பு என்பது தான் நமது கலாச்சாரம்.


இந்திய நிபுணர்களே ஒய்2கே பிரச்சினை வந்த போது தீர்வு கண்டவர்கள். இதையும் நம்மால் எளிதில் கடக்க முடியும். 


நமது மருந்துகள் உலகில் பலரை காப்பாற்றி உள்ளது. இந்தியாவின் திறனை உலகமே நம்பத்தொடங்கி உள்ளது. 


இந்தியா இப்போது வளர்ச்சிக்கான பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த சிக்கலை நமக்கான வாய்ப்பாக நாம் மாற்ற்றி வருகிறோம்.


புதிய இந்தியாவை உருவாக்க புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். 


சுயசார்புக்கு 5 கொள்கைத்தூண்கள் தேவை


பொருளாதாரம், உள்கட்டமைப்பு, ஜனநாயகம், எரிசக்தி, நவீன தொழில்நுட்பம் ஆகியவை தேவை. 


பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பு பயன்படுத்தப்படும். 


நிவாரண தொகுப்பு குறித்து விரிவாக நிதியமைச்சகம் விளக்கமளிக்கும். 


இந்த திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் கொரோனா பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்க முடியும். 


உள்ளூர் சந்தையின் தேவையை கொரோனா உணர்த்தி உள்ளது. உள்ளூர் விநியோக முறைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 


சர்வதேச போட்டியை தற்சார்பு கொள்கை மூலம் எளிதில் வெல்லலாம். 


இந்தியாவில் நான்காவது ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும். மாநில அரசுகளின் கோரிக்கையை அமல்படுத்துவதாக இருக்கும் விவரங்கள் 18 ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும். 


 


 


 


Previous Post Next Post