பழனி ஆயக்குடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் இலவச அரிசி, பழங்கள், மளிகை பொருட்கள்

பழனி ஆயக்குடி பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கொரோனோ வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உணவிற்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் துயரங்களைப் போக்கும் வகையில் இலவச அரிசி, பழங்கள், மளிகை பொருட்கள், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


 

இந்நிகழ்ச்சியின் தலைமையாக ஒன்றிய செயலாளர் ஆயக்குடி செல்வம் தலைமையேற்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் 200 நபர்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் பழங்களை வழங்கினார். பொது மக்களை முக கவசம் அணிந்து வரச் சொல்லி சமூக இடைவெளி கடைபிடித்து 200 நபர்களையும் தனித்தனியாக நிறுத்தி அரிசி மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.

 


 

பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த மளிகை பொருட்கள் அரிசி உள்ளிட்ட தொகுப்பினை வழங்கியதால் மக்கள் இன்முகத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து பழனி புறநகரப் பகுதிகளில் ஒவ்வொரு ஊராக இலவச அரிசி மளிகை பொருட்கள் பழங்கள் வழங்க உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன்,சச்சி என்ற சக்கரபாண்டி, இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் மக்கள் நல விரும்பிகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

 

 

Previous Post Next Post