தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் 300 துணை நடிகர்கள் நடிகைகளுக்கு மளிகை பொருட்கள்

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் 300 துணை நடிகர்கள் நடிகைகளுக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருட்களை பொதுச்செயலாளர் வினோத் வழங்கினார்.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால், வருமானம் இல்லாமல் சிரமப்படும் துணை நடிகர்கள், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் ஆகியோர்களுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வினோத் தலைமையில்,

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

தலைவர் அப்துல் பாய், திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரசிகர்மன்ற பொறுப்பாளர் ஜெ ஆர் சுரேஷ் முன்னிலையில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பாலா, வீரா, சேகர், பன்னீர் உள்ளிட்ட  இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.