தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா... 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585 ஆக உள்ளது.


477 பேரில் 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.


கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று 500க்கும் குறைவாகவே உள்ளது. 


தமிழகத்தில் 61 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.


கொரோனாவுக்கு இன்று மேலும் 3 பே உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 74 ஆகி உள்ளது. 


சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ஈரோட்டில் 31 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை, திருப்பூரில் 15 நாட்களாக தொற்று இல்லை, கோவை, சேலம், திருவாரூரில் 10 நாட்களாக தொற்று இல்லை 


இந்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இன்று மட்டும் 10,535 பேருக்கு பரிசோதனை செய்யபப்ட்டு உள்ளது.\