கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்; வேப்பூர் போலீஸில் பரபரப்பு  புகார்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர், கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

வேப்பூர் போலீஸில் பரபரப்பு  புகார்.  

 

கொரோனா தொற்றுவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருபவர் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஏ, அகரம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன்  மணிமாறன்  (வயது - 30 ), கோயம்பேடு தொழிலாளியான இவர்  -2 ந் தேதி   சென்னையிலிருந்து ஊருக்கு  வந்தார்.

 

தமிழக அரசின் வழிகாட்டலின்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் சென்னையிலிருந்து வரும் நபர்களை பரிசோதனை செய்ய  தனிமைபடுத்த உத்திரவிட்டிருந்தார்.

 

அதன்படி அகரம் ஊராட்சி மன்ற தலைவர்,  கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழு ஒவ்வொரு ஊரிலும் சென்னை மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை கணக்கெடுத்து அவர்களை தனிமைபடுத்தினார்கள்.  

 

அதன்படி விருத்தாசலம் சார் ஆட்சியர் ஆலோசனையின் பேரில், திட்டக்குடி வட்டாட்சியர் முன்னிலையில் அனைத்து கிராமங்களிலும் வெளியூரிலிருந்து வந்தவர்களையும்,  கோயம்பேடு பகுதியிலிருந்து வந்தவர்களையும் 

அழைத்து சென்று தனிமை படுத்தினார்கள்.

 

அதுபோலவே திட்டக்குடி தாலுக்கா, ஏ அகரம் கிராமத்திற்கு சென்னையிலிருந்து வந்தவர்களை  கடந்த 3 தேதி  வந்த சுமார் 29   நபர்களை தனிமை படுத்த வேப்பூர் அருகிலுள்ள திருப்பெயர்  ஜெயப்பிரியா பள்ளிக்கு அழைத்து வந்து முதல்நாள் தனிமைபடுத்தினார்கள், மறுநாள் அவர்களை  பரிசோதனை செய்ததில் அகரம் கிராமத்தில் சுமார் 13     நபர்களை  மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். அதில் அகரம் திருநாவுக்கரசு மகன் மணிமாறனும் ஒருவர் 

 

நேற்று முன்தினம் காலை மணிமாறன் ஏ,அகரம் கிராம விஏஒ பசீர் என்பவருக்கு போன் செய்து  ஏன்  கொரோனா பரிசோதனைக்கு என் பெயரை எழுதி கொடுத்தாய், என்று  கேட்டு  அதனால் நான் மருத்துவமனையில் 15 நாள் இருந்துவிட்டு வந்து உன்னை கொலை செய்கிறேன் என்று போனில் சுமார் கால் மணி நேரத்திற்கு மிரட்டல் விடுத்து பேசினார். 

 

இதனால் பயந்துபோன கிராம நிர்வாக அலுவலர் பசீர் திட்டக்குடி டிஎஸ்பி, வெங்கடேசன், வேப்பூர் காவல்  நிலைய ஆய்வாளர் கவிதா ஆகியோரிடம்  புகார் அளித்தார்,  அதனால் திட்டக்குடி மற்றும் வேப்பூர் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.