விருத்தாசலம், வேப்பூர், தொழுதூர் பகுதிகளில் தனிமை படுத்தபட்ட 212 கோயம்பேடு தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பபட்டனர் 

 

தனிமை படுத்தபட்ட கோயம்பேடு தொழிலாளர்கள் 212 பேர் இன்று வீட்டிற்கு அனுப்ப பட்டனர். 

 

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கோயம்பேடு மார்கட் மூடப்பட்டவுடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினார்கள்  அப்படி திரும்பியவர்களை அவர்கள் வசிக்கும் தாலுக்கா பகுதிகளில் தனிமை படுத்தபட்டனர்

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி,  விருத்தாசலம் கல்லூரி விடுதி, தொழுதூர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2 ந் தேதி வந்த தொழிலாளர்களை தனிமைபடுத்தி வைத்திருந்தனர் அவர்கள் 14 நாட்கள் முடிந்த நிலையில்  நேற்று 212 தொழிலாளர்களுக்கு சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை  அரிசி, காய்கறி, மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்த அவர்களது வீட்டிற்கு அனுப்ப பட்டனர், வீட்டிற்கு சென்றும் மேலும் 15 தங்களை தாங்களே தனிமை படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்

 

அப்போது வட்டாட்சியர்கள்  விருத்தாசலம் கவியரசு, வேப்பூர் கமலா, திட்டக்குடி செந்தில்வேல் மற்றும் ஊரக வட்டார  வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.