பாளையங்கோட்டையில் தன்னார்வ தொண்டு செய்யும் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்
 

திருநெல்வேலி மாநகர் மாவட்ட பாளையங்கோட்டை பகுதி அதிமுக மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள் ஏற்பாட்டில் பாளை பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு செய்யும் இளைஞர்கள் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் செயலாளரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமாகிய தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்பொழுது மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்ட், எஸ் .கே .எம் .சிவகுமார், பாளை பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டால் சரவணன், திருநெல்வேலி பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பளையபேட்டை கணேசன், பாளை பகுதி மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், மாவட்ட இளைஞர் பாசறை துணைத்தலைவர் ஆவின் சுரேஷ், முத்துப்பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.