மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண உதவி: கமல் ஜீவா முன்னிலையில் வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு கமல் கே.ஜீவா முன்னிலையில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. வடக்கு நகர செயலாளர்  அருள் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கே.எம் மணி,  வெஸ்ட் கோஸ்ட் மணி, டைகர் மணி உள்ளிட்டோர்  200-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அரிசி காய்கறிகள் போன்ற தொகுப்புகளை  அனுப்பர்பாளையம் பகுதியில் வழங்கினர். வடக்கு தெற்கு நகர செயலாளர்கள் மற்றும் மய்ய நிர்வாகிகள் மகளிர் அணியினர்  கலந்து கொண்டனர்