கோவில்பட்டியில் 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவில்பட்டியில் 2 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒப்பந்த பெண் தூய்மை பணியாளர்‌ ஒருவருக்கும், குஜராத்திலிருந்து கோவில்பட்டிக்கு வந்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 4 வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதேபோன்று கயத்தார் புதுக்கோட்டை, கொத்தாளி கிராமங்களை சேர்ந்த 2 பேருக்கும், ராமலிங்க புரத்தை சேர்ந்த குழந்தை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதியில் மட்டும் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.