டாஸ்மாக் கடைகளுக்கு மறுபடியும் பூட்டு... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்த்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து 7- ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக சென்று மது வாங்கினர்


சில இடங்களில் வரிசையில் நின்றும் குடிமகன்கள் மது வாங்கினர். 


‘ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பிலும், நிபந்தனையுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்திருந்தது.


இந்த நிலையில், இன்று டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி அளித்தும் தீர்ப்பளித்து உள்ளது. 


மக்கள் நீதி மய்யம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மே 17 ந்தேதி வரை மதுக்கடை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


மேலும் மதுக்கடை ஊழியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.