ஒரே நாளில் 18 பேர் பலி: தமிழகத்தில் இன்று ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 31,667 ஆனது. 


தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 18 பேர் செத்துப் போய் உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 269 ஆக உள்ளது. 


இன்று மட்டும் 15 ஆயிரத்து 671 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரத்து 314 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


இன்று நோய் குணமடைந்து 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 16 ஆயிரத்து 999 பேர் நோய் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர்.


இப்போதைய நிலையில் 14396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


மாவட்டங்களில் பார்த்தால் சென்னையில்தான் அதிக பாதிப்பு தெரிய வந்துள்ளது. சென்னையில் 1155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேரக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.