50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற போது  கொலை செய்த 22 வயது  வாலிபர்


கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர் 

திருப்பூர் பாண்டியன் நகர் அருகில் உள்ள அண்ணா நகரில் தனியாக வசித்து வந்ததுடன் அப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். 

நேற்று இரவு இலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும் போது, பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் பூபதி (வயது 22)., லட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழிக்க முயற்சி செய்தார். 

கற்பழிக்க முயற்சி செய்த பூபதி லட்சுமி முத்தமிட சென்றார், அப்போது லட்சுமி பூபதியின் உதட்டை பிடித்து கடித்து வைத்தார். இதில் பூபதிக்கு உதட்டில் இரத்த காயம் ஏற்பட்டது. 

வலி தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த பூபதி பக்கத்திலிருந்த தோசைக்கல்லை எடுத்து லட்சுமியின் மண்டையில் ஒரே அடி யாக அடித்து கொன்று விட்டார். 

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பூபதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பூபதி கைது செய்த திருமுருகன்பூண்டி போலீசார் அவர் மீது கற்பழிக்க முயற்சி,  கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 22 வயது வாலிபர் 50 வயது பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


 

 


 


 ReplyForward