குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்ளுக்கு கொரோனா நிவாரண உதவி

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவி


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சென்னை பல்லாவரம் அஸ்தினாபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய தினக்கூலி தொழிலாளர்கள் குடும்பங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு 
கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் கோன்ச் புதுதில்லி அமைப்பும் இணைந்து  அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இதில் தாம்பரம் தாசில்தார் சரவணன் மற்றும் தாம்பரம் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீராம்  அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக இயக்குனர் டாக்டர் இருதயசாமி மற்றும்
ராகினி அவர்கள்  குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார்  கூறினார்.