44 பேர் பலி...1,843 பெருக்கு கொரோனா தொற்று... இன்று 797 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கை நெருங்க ஒரு சில  மட்டுமே குறைவாக உள்ளன.


கொரோனா பரவல் அதிகரித்ததால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டத்துக்காரர்கள், தங்களது சொந்த ஊருக்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பயணங்களை மேற்கொண்டனர்.


இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு அறிவிக்கப்படாது என முதல்வர் கூறி இருந்த நேரத்தில் மருத்துவக்குழு பரிந்துரை காரணமாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த தொற்று எண்ணிக்கை 46,504 ஆக உள்ளது.


இன்று மட்டும் 18,403 சேம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7,29,002 சேம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 


சென்னையில் மட்டும் 1,257 பேருக்கு தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 120, காஞ்சிபுரம் 39, திருவள்ளூர் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


கொரோனா பாதிக்கப்பட்ட 20,678 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 797 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்று உள்ளனர்.


இதன்மூலம் இதுவரை 25,344 பேர் குணமடைந்துள்ளனர்.


இன்று மட்டும் 44 பேர் பலியாகி உள்ளனர்: இதன்மூலம் தமிழகத்தில் 479 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.