தமிழ்நாட்டில் இன்று 3,509 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 3 ஆயிரத்து 509 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3,358 பேருக்கு பாதிப்பு உறுதியானது. 151 பேர் வெளிமாநில, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதையும் சேர்த்து இன்றைய பாதிப்பு 3,509 ஆனது.


இதன்மூலம் 70,977 பேருக்கு இதுவரை பாதிப்பு உறுதியானது. சென்னையில் இன்று மட்டும் 1,834 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது


இன்று மட்டும் 45 பேர் உயிரிழந்து உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக உள்ளது.