3,645 பேருக்கு கொரோனா...46 பேர் மரணம்... சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தீவிர பரவல்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 3645 பேருக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் 3,523 பேர்.வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் 122 பேர்.


சென்னையில் மட்டும் 1956 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இதன்மூலம் மொத்த பாதிப்பு 74622 ஆக உள்ளது. 


இன்று மட்டும் 32 ஆயிரத்து 317 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக ஒன்பது லட்சத்து 92 ஆயிரத்து 991 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டூ உள்ளது.


மொத்தமாக 32,305 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


இன்று மட்டும் ஆயிரத்து 388 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்குச் சென்றுளளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் ஆகி சென்று அவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 357உள்ளது.


இன்று மட்டும் 46 பேர் இறந்து போய உள்ளனர். இதுவரை மொத்தமாக 957 பேர் இறந்துவிட்டனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 232 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது.