வேகமாக பரவும் கொரோனா...38 பேர் பலி...1,974 பேருக்கு தொற்று...

தமிழகத்தில் இன்று மட்டும் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 44,661 ஆனது.


இன்று மட்டும் 18,782 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 7,10,599 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 


இதில் 19,676 பேர் ஆஸ்பத்திரிகளில சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24,547 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.


கொரோனா தொற்றுக்கு இன்று தான் அதிகபட்சமாக 38 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை 435 பேர் பலியாகி உள்ளனர்.


சென்னையில் அதிகபட்சமாக 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக செங் கல்பட்டில் 178 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது.