உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை: மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை

 திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர் - கவுசல்யா வெவ்வேறு சாதியினராக இருந்த போதும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.


இதற்கு கவுசல்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி உடுமலை பஸ் ஸ்டாண்டில் வைத்து சங்கர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.


இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.


இந்த சம்பவத்தில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இதுகுறித்த மேல்முறையிட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியது. 


இதில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. 


சங்கர் இறப்புக்கு பின்னர் சக்தி என்பவரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டிருந்தார். இது பல தரப்புகளிலும் விமர்சனத்துக்கு ஆளானது.



இந்நிலையில் இன்று பேட்டியளித்த கவுசல்யாவின் தாயார், கடவுள் தான் தன் கணவரையும், தன்னையும் காப்பாற்றி நல்ல தீர்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



 


Previous Post Next Post