மதுரையில் வாலிபர் கொலை: தலையை தனியாக வெட்டி எடுத்த கொடூரம்

மதுரை, அவனியாபுரம் அருகே பெரியார் நகரில் வாலிபரை வெட்டி தலையை தனியாக எடுத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.


 அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்த அவ்வா என்ற முத்துச்செல்வம் (வயது 22 ). இவர்  ஏற்கனவே அவனியாபுரம் பாமக பிரமுகர் இளஞ்செழியன் கொலை வழக்கு மற்றும் அவரது தம்பி மாரி கொலை வழக்கு போன்றவற்றில் தொடர்புடையவர்.


இவர் இருக்கும் இடத்தினை தெரிந்து கொண்ட 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.  தப்பி ஓட முயன்றபோது  முத்துசெல்வத்தின் தலை வயிறு ஆகிவற்றில் அரிவாள் மற்றும் கத்தியால் குத்தி கொன்று உள்ளனர்.


மேலும்,  முத்து செல்வத்தின் தலை தனியாக அறுத்து எடுத்து வைத்து விட்டுச் சென்றனர்.


இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.