திருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை !

திருப்பூர் அருகே 8 வயது சிறுவன் கொடூர கொலை !

 

உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் காதலர்கள்  வெறிச்செயல். 

 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கராஜ் - சுமதி தம்பதியர் இவர்களுக்கு  விக்னேஷ்(9) மற்றும் பவனேஷ்(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். பனியன் தொழிலாளி ஆன இவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் மாலைதான் வீடு திரும்புவார்கள் இதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நேற்றை தினம் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ள நிலையில் பவனேஷ் மதியத்தில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது.  பின்னர் வேலையை முடித்துவந்த தங்கராஜ் நேற்று இரவு ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பல்லகவுண்டன் பாளையம் குளப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊத்துக்குளி காவல் நிலையை போலிசாருக்கு தெரிவித்துளளனர்.  சம்பவ இடத்திற்கு சென்ற  காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் காணமல் போன பவனேஷ் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இக்கொலை சம்பவம் குறித்து ஏழு தனிப்படைகள் அமைத்து கொலைக்கான காரணம் குறித்து  ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பவனேஷை அழைத்து சென்றதை சிலர் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் அஜித் (21) என்ற இளைஞர் பதின்மவயது சிறுமியுடன் குளக்கரை பகுதியில் தனிமையில் உல்லாசமாக  இருந்துள்ளார். இதனை பார்த்து விட்டதால் சிறுவன் இருவரின் வீட்டிலும் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் சிறுவனை இருவருமாக சேர்ந்து கொடுரமாக கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அஜித் தையும் பிடித்து விசாரிக்கையில் அவர் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். சிறுவன் பார்த்ததை வெளியே கூறினால் தனது மற்றொரு காதல் பிரிந்து விடுமோ என சிறுமியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரையும்  பிடித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்