தூத்துக்குடியில் கொரோனாவுக்கு வாலிபர் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரானா நோய் தொற்றுக்கு  சிகிச்சைக்கு பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


விருதுநகர், வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை சார்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது - 34). இவர்  சென்னையிலில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.


கடந்த 7ம் தன் மனைவி அருள்மொழி (28), மகள் சிஸ்டிகா(4), ஆகியோருடன் சென்னை  வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்தார்.


உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேராக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பாட்டார். 


கடந்த 10ம் தேதி இவருக்கும், இவரது மனைவி அருள் மொழிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மனைவி அருள்மொழி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வரும் நிலையில்.  மணிகண்டன் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இறந்துவிட்டார்.


இறந்த மணிகண்டன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர். ஏற்கனவே கடந்த ஏப்ரல் 10ம் தேதி தூத்துக்குடியை சார்ந்த மூதாட்டி பலியானார். அதைத்தொடர்ந்து கடந்த தே 15ம் தேதி கடலாடி பகுதியை சார்ந்த இளைஞர் உயரிழந்த நிலையில், இன்று வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தை இளைஞர் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.