திருப்பூரில் டிக் டாக்  சூரியா தற்கொலை முயற்சி

திருப்பூர் அய்யம்பாளையம் சபரிநகரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற சூர்யா என்பவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

டிக் டாக் ரவுடி பேபி என தன்னத்தானே அழைத்துக் கொள்ளும் சூர்யா அதே பெயரில் பிரபலமானார். அவர் அரைகுறை ஆடைகளுடன் செய்யும் டிக் டாக் வீடியோக்கள் பல சர்ச்சைகளுக்கு ஆளாகின.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து திருப்பூர் வந்த இவரை,  இவரது வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்கள். 


ஆனால், தான் ஆம்புலன்சில் வர முடியாது என அடம்பிடித்தார் சூரியா. இவர் அடம்பிடித்த வீடியோக்கள் செய்தியாக பரவின. 

 

இது குறித்த செய்தி வெளியிட்ட பாலிமர் சேனல் செய்தியாளரை சூரியா டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு மிரட்டினார்.  

 

இதனால் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் போலீசார் சூரியா மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். 

 

இந்த நிலையில் தான் சூரியா தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

 
 

முன்னதாக இவர் டிக்டாக்கில் பலமுறை தற்கொலை செய்து கொள்வேன் என்று வீடியோவில் பலருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.