எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு  அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயம்பாளையம் ரேஷன் கடை, பஸ்நிலையம் மற்றும் அவிநாசி பகுதியில் உள்ள புது பஸ்நிலையம், தாலுக்கா அலுவலகம் என  நான்கு இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பு ஏற்படாவண்ணம் பொதுநலன் கருதி சுமார் 1000 பேருக்கு முகக்கவசம் மற்றும் 40 லிட்டர் கபசுர குடிநீர் கஷாயம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

 

மேலும் இரண்டு இடங்களில் 3 மரக்கன்றுகள்  நடப்பட்டது. இத்துடன் 5 இளைஞர்கள் புதிதாக கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைதலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் முகமது ஆசிக் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் கஷாயம் ஆகியவற்றை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற தொகுதி தலைவர் முஸ்தபா, தொகுதி செயளாலர் தாரிக், தேவராயம்பாளையம் கிளைத்தலைவர் முபாரக்,  கிளை செயளாலர் பாருக், முன்னாள் பொருப்பாளர் நாசர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.