பெண் எஸ்.ஐ., க்கு கொரோனா... திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் மூடல்

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி நோய்த்தொற்று பரவல் வருகிறது. திருப்பூரில் நேற்று மட்டும் 14 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், இன்று காலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் மனைவிக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


மேற்படி சப் இன்ஸ்பெக்டர் மனைவி சென்னை சிட்டி போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திருப்பூர் வந்தார்.


அவருக்கு பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவரது கணவரான போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.


மேலும், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. 


அதே வளாகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.


இத்துடன் அவர்கள் தங்கி இருந்த போலீஸ் குடியிருப்பில் கிருமி நாசினி தெலிக்கப்பட்டு உள்ளது.


தொடர்பில் இருந்த அனைவருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் தெரியவரும்.