68 பேர் பலி...3,713 பேருக்கு தொற்று...அனைத்து மாவட்டங்களிலும் கால்பரப்பும் கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் மரணமடைந்துள்ளனர்.


கொரோனா நோய் தொற்று பரவல் சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து உள்ளது. தமிழக அளவில் இன்று மட்டும் 3,714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உள்ளது. 


இதில் 33,213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று 2,737 பேர் உள்பட இதுவரை 44,094 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.


மரண எண்ணிக்கையை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக 68 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக 1,025 பேர் இதுவரை இறந்துள்ளனர்.


இன்று மட்டும் 32,068 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.


சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.