இனிமேல் சேலை, சுடிதாரில் தான் வீடியோ...சின்னத்திரை, வெள்ளித்திரையிலும் வருவேன்.. டிக் டாக் புகழ் சூர்யா பேட்டி.

டிக் டாக் தடை செய்தது மகிழ்ச்சியே. இனி புதிய தளத்தில் இழுத்து போர்த்திய புதிய சூர்யாவை காண்பீர்கள். சில நாட்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கப் போகிறேன். டிக் டாக் புகழ் சூர்யா பேட்டியளித்தார் .

 

இந்தியா சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக தொடர்ந்து இரு தரப்புகளும் ராணுவத்தை எல்லையில் குவித்து வருகின்றனர் இந்நிலையில் இந்திய அரசு சீன செயலிகள் சில இந்திய தகவல்களைத் திருடுவது 59 செல்போன் செயலிகளை தடை


செய்தது இதில் பெரும்பாலும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலையும் அடங்கும்.இந்த டிக் டாக் செயலியில் பலரும் முழுநேரமாக ஈடுபட்டுள்ள நிலையில் இதன் தடை காரணமாக டிக் டாக் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்த திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர் இதுகுறித்து நமது சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 

டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டது.சிறிது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் சீன செயலி என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும் எனவும் தெரிவித்தார். தனக்கு புதிதாக பட வாய்ப்புகள் வருவதால் இனிமேல் சூர்யாவை சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் காணலாம் எனவும் ஒரு படத்தில் நடித்து முடித்து அதன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

மற்றவர்கள் நினைப்பது போல தான் ரவுடிபேபி இல்லை எனவும் தான் ஒரு கோழை மனது பெண் எனவும் தெரிவித்தார் இந்த பிம்பம் தனக்கு மாற்றப்பட்டு ரவுடி பேபி என அழைக்கப்பட்டது டிக் டாக் மூலம் தான் இழந்ததாகவும் ஆனால் இத்தனை புகழையும் டிக் டாக் மூலமே பெற்றது தனக்கு கிடைத்த மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.

தற்பொழுது கிடைத்துள்ள இடைவெளியை தனது குழந்தைகளுடன் சேர்ந்து கழிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.