எல்லாரும் பாஸ் ஆயாச்சு... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு வரவேற்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:


பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளை ஜூன் 15 முதல் நடத்த அரசு அறிவித்து இருந்தது.தற்போது உயர்நீதிமன்றம் தேர்வை தள்ளி வைக்க கேட்டுக் கொண்டுள்ளது.


சென்னை உள்பட சில மாவட்டங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.


எனவே பெற்றோரின் கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பதினோறாம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.


இதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மதிப்பெண்களை பொறுத்தவரை காலாண்டு, அரையாண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


12ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.


இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.