இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதி விபத்து

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாாியூா் வெள்ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இருசக்கர வாகத்தில் பயணம் செய்த மூன்று போில்  சத்தியமங்கலம் கொத்துக்காடு பகுதியைச்சோ்ந்த ஒரு ஆண் ஒரு பெண் ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மற்றொரு பெண் காாில் பயணம் செய்த ஓட்டுநா் உட்பட இருவா் என மூன்று போ் படுகாயங்களுடன் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்...., கூகலூர் உறவிவினர் வீட்டிற்கு சென்று திரும்பி வரும் வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மோகன்ராஜ் 21 சித்ரா 39 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. தங்கமணி மற்றும் காரில் பயணம் செய்த இருவர் ஆகியோர் கோபி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்