தமிழகத்தில் 3,940 பேருக்கு கொரோனா...54 பேர் பலி... மதுரை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சியில் தீவிர பரவல்

தமிழ்நாட்டில் இன்று 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


தமிழ்நாட்டிலேயே 3,761 பேருக்கும், வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 179 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


மொத்தம் 82,275 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.


சென்னையில் மட்டும் 1,992 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை 284, செங்கல்பட்டு 183, கள்ளக்குறிச்சி 169, திருவண்ணாமலை 142 பேர் என வெளிமாவட்டங்களில் அதிக தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டு உள்ளது.


கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 1443 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 45,537 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு சென்று விட்டனர். 


தற்பொழுது 35,656 பேர் மட்டும் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


இன்று மட்டும் 54 பேர் செத்துப்போனதுடன் சேர்த்து இதுவரை 1079 பேர் இறந்து உள்ளனர்.