திருப்பூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கடன் வழங்கும் விழா... முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., பங்கேற்பு


திருப்பூர், அனுப்பர்பாளையத்தில், திருப்பூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீடு கட்டுவதற்கு தலா ரூ.5 லட்சம் கடன் தொகைக்கான காசோலையை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள். இந்த நிகழ்வில், வங்கி தலைவர் நீதிராஜன், துணைத் தலைவர் பழனிவேலு, செயலாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் சுதா, சாந்தி, சுமதி, ஆறுமுகம், பாபு, அருண்குமார், அசோக்குமார், புண்ணியமூர்த்தி, செந்தில்குமார், உதவியாளர் கல்பனா,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.