ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை

ஶ்ரீபெரும்புதூர், காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகள் சீரமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

 


 

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டரம் பாக்கம் ஊராட்சியில் உள்ள தெருச்சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும் சகதியுமாக இருந்ததை தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் தெருச்சாலைகளை சுரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனியிடம் கோரிக்கை வைத்தனர். 

 

இதையடுத்து ஊராட்சியில் மிகவும் பழுதடைந்த பிராமனர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கெங்காத்தம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 16 தெருக்களை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து காட்டரம்பாக்கம் ஊராட்சி பொதுநிதியின் மூலம் ரூ 1.10 கோடியில் தெருச்சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து தெருச்சாலைகளை சீரமைப்பதற்கான பூமிபூஜை காட்டரம்பாக்கம் பகுதியில்  நடைபெறறது.

 

காட்டரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையிலும், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் சிவகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீபெரும்புதூர் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் செந்தில்ராஜன் கலந்து கொண்டு பூமிபூஜையை நடத்தி சாலை பணியை தொடங்கி வைத்தார். இதில் காட்டரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post