வைத்தீஸ்வரன்கோயிலில் கந்த சஷ்டி கவசம்  நுால் வெளியீட்டு விழா


மயிலாடுதுறை  மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பிரசித்தி பெற்ற வைத்தியநாதரசுவாமி கோயில் உள்ளது. தருமை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மூலவர் வைத்தியநாதசுவாமி அம்பாள் தையல்நாயகி அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

 

இக்கோயில் தேவாரபாடல் பெற்ற 274 தலங்களில் 16வது தலமாகும்.5 பிரகாரம் 5 கோபுரம் நேர்க்கோட்டில் உள்ள தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதியுள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன்கோயிலாக இருந்தாலும் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் உள்ள பகுதியில் சிவனின் குமாரரான முருகன் இங்கு செல்வமுத்துகுமாரசுவாமி என்ற திருப்பெயரில் அருள்பாலித்து வருகிறார்கள்.

 

தினசரி காலையிலும் அர்த்தஜாம பூஜையிலும் முத்துகுமாரசாமிக்கு தீபாரதனை நடை பெறுகிறது. நவக்கிரகங்களில் அங்காரகன்(செவ்வாய்பகவான்) தனிச்சன்னதியுள்ள கோயிலாகும். இத்திருத்தலத்தில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.

 

இத்தகைய சிறப்பு மிக்க கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு செல்வ முத்து குமாரசுவாமி சன்னதியில் மயிலாடுதுறை ஆன்மிகபேரவை சார்பில் பேரவை நிறுவனர் டாக்டர் வக்கீல் ராம.சேயோன் முன்னிலையில் பேரவை சார்பில்  பதிப்பித்த கந்த சஷ்டி கவசம் என்ற நுாலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட முதல்பிரதியை வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள் பெற்று கொண்டார்

Previous Post Next Post