திருப்பூர் அதிமுக தொழில்நுட்பப்பிரிவில் பணியாற்ற  2,347 பேர் விண்ணப்பம்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல்

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக, சார்பில்,தொழில்நுட்பப்பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி, கடந்த 3 நாட்களாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக அலுவலகத்தில் நடந்தது வந்தது. 


இதில், 2,347 பேர் கழக தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்து இருந்தனர். 
இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி அளவிலான நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புதிதாக விண்ணப்பித்தவர்களை நேர்காணல் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வுக்கு திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 அப்போது தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்ற விண்ணப்பித்தவர்கள் மத்தியில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசுகையில், ‘புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் வழிநடத்திய இந்த இயக்கம் இன்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களாலும் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது. கழக அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேரெழுச்சியை உருவாக்க அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

தொழில்நுட்ப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசும்போது கூறுகையில், ‘ தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் தான் கம்ப்யூட்டர்கள், அதிவேக இண்டெர்நெட் சகிதம் தொழில்நுட்பப்பிரிவுக்கு தனி அலுவலகம் அமைத்து சிறப்பான துவக்கத்தை ஏற்ப்படுத்தி இருக்கிறது. தொழிநுட்ப்பபிரிவில் பணிபுரியும் அனைவரும் ஆர்கானிக் வழியாக (நேரடி பகிர்வில்) கழக செயல் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர பாடுபட வேண்டும் என்றார். 

முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தொழில்நுட்பப்பிரிவு மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப்பபிரிவு அலுவலகத்தை பார்வையிட்டனர். 

 

தொடர்ந்து நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில்  இளைஞரணி இணை செயலாளர் அமுல் கந்தசாமி,  முன்னாள் மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், மார்க்கெட் சக்திவேல்,  பகுதி கழக செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், ஏ.எஸ்.கண்ணன், கணேஷ், தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் எம்.கே.எம்.கணேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் கேபிள் சிவா,  ஷாஜகான், பரமராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். 


 

  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தொழில்நுட்பப்பிரிவுக்கு, மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் புதிதாக விண்ணப்பித்தவர்களை  நேர்காணல் நடைபெற்றது.   திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



 


படம்:2

  திருப்பூர் மாநகர் மாவட்ட கழக தொழில்நுட்பப்பிரிவுக்கு உயர்தர கணினிகள், அதிவேக இண்டெர்நெட் இணைப்புடன் அமைக்கப்பட்டு உள்ள புதிய அலுவலகத்தினை, திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கழக தொழில்நுட்பப்பிரிவின் மேற்கு மண்டல செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


Previous Post Next Post