திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் உள்பட 16 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்திலும்  மற்ற மாவட்டங்களை போலவே கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்து உள்ளது.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நேற்று வரை 204 பேருக்கு தோற்று இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 16 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


இதில் திருப்பூர் மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


மேலும், திருப்பூர் மங்களம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண் மற்றும் 32 வயது ஆண் என இருவருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது. 


திருப்பூர் சோளிபாளையத்தில் 25 வயது ஆண், சஞ்சய் நகரில் 32 வயது ஆண், 51 வயது ஆணுக்கும், அனுப்பர்பாளையம் ரங்கநாதபுரத்தில் 27 வயது பெண், அனுப்பர்பாளையத்தில் 26 வயது ஆண், அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டை சேர்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. 


ராயபுரத்தில் 45 வயது ஆணுக்கும் தொற்று  உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


திருப்பூர் பி.என்.ரோடு, காமராஜ் நகரை சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.


பல்லடம் கணபதிபாளையத்தில் 17 வயது ஆண், பூமலூரில் 31 வயது ஆண், மகாலட்சுமி நகரில் 21 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 


டி.பி.என்., கார்டனில் 37 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


காங்கயத்தில் 24 வயது பெண்ணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


தொற்றுக்குள்ளான அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.