24 வயது பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்... இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட கொடூரன் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மாது (41) .


இவர் கடந்த சில வருடங்களாக திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் 6 வயது பெண்குழந்தையுடம் வசித்து வருகிறார்.


அங்கு தங்கி இருந்து அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.


இவருக்கு அங்கு  வேலை செய்து வந்த 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்ப்பட்டு உள்ளது.  உடனே அந்த பெண்ணை காதலிப்பதாக நாடகமாடி தனது பழக்கத்தில் நெருக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளார். 


மேலும் அந்த பெண் தனியாக இருக்கும் போது அவரை  நிர்வாணமாக வீடியோ மற்றும் போட்டோ எடுத்து உள்ளார். அதை வைத்து மிரட்டி அந்த பெண்ணை  பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.


இதே வேலை தொடர்ச்சியாக அவர் செய்து வந்ததால், அந்த பெண் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வந்தார். 


இந்த நேரத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் மாது சொந்த ஊரான சென்னிமலைக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.


மாது சென்றுவிட்டதால் அந்த 24 வயது பெண் தொல்லையில்லாமல்  நிம்மதியாக இருந்து உள்ளார்.ஆனாலும் மாது அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி தொடர்ச்சியாக மிரட்டியுள்ளார் என கூறப்படுகிறது. 


இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். . அதை அறிந்த மாது அந்த மாப்பிள்ளைக்கு இந்த பெண்ணின் வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பிவைத்துள்ளார்.


மேலும் ஒரு படி மேலே சென்று  அந்த பெண்ணின்  போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.


இதனால் மனமுடைந்த அந்த 24 வயது பெண்  திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


புகாரின் அடிப்படையில் மாதுவை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார் போட்டோ மற்றும் வீடியோவை  பறிமுதல் செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.