தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா: வக்கீல் கோபிநாத் துவக்கி வைத்தார்

திருப்பூர் லாலீகா மைதானத்தில், தமிழ்நாடு ஸ்கூல் கேம்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அந்த அமைப்பின் தலைவர் வக்கீல் கோபிநாத், அசோசியேசன் லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.


மேலும் அந்த அமைப்புக்கான டி-ஷர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து பேசிய வக்கீல் கோபிநாத், ‘ இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் உடலை உறுதியாக வைத்திருந்தால் தான் மனோவலிமையும்   இருக்கும். உடலினை உறுதி செய்ய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகள் அவசியம். 


இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெறும் மாணவர்களில் ஒருவர் தேசிய அளவில் அடுத்த ஆண்டுக்குள் சாதனை படைப்பார்” என்றார்.


இந்த கூட்டமைப்பில் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவருக்கும் திறமையான பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.  தமிழக அளவில் நடக்கும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க ஏற்பாடு செய்து கூட்டமைப்பில் உள்ளவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவதே லட்சியம் என அந்த அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.


இந்த நிகழ்வில், செயலாளர் சுஜித் குமார், பயிற்சியாளர்கள் சத்தி, ஹரி, எம்.எஸ்.செந்தில்குமார், என்.சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். 


Previous Post Next Post