தமிழகத்தில் 3,756 பேருக்கு கொரோனா...64 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வாரத்தில் இருந்ததை காட்டிலும் சற்றே குறைந்து இருக்கிறது. தற்போதைய எண்ணிக்கை 4000க்கு குறைந்த பாதிப்பு காணப்படுகிறது.இன்று தமிழகத்தில் 3,756 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும், 1,261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


இன்று மட்டும் 34,962 பேருக்கு செய்த பரிசோதனையில் இந்த பாதிப்பு தெரியவந்துள்ளது. 


இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை,1,700 ஆக உயர்ந்து உள்ளது.


மதுரையில், 379 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், என சென்னை அல்லாத மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.


இதுவரை தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,22,350 ஆக உள்ளது. இதில் இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 


இதுவரையில் 74,167 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்றுள்ளனர். 


46,480 பேர் மட்டும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.