திருப்பூரில் 6 வயது குழந்தை உள்பட 26 பேருக்கு கொரோனா... ஏரியா வாரியாக பாதிப்பு விவரம்

திருப்பூரில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.இப்போது வரை 112 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


இன்று பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம் வருமாறு:


திருப்பூர்  உடுமலை, கண்ணமநாயக்கனூரை சேர்ந்த 55 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் நந்தவனம்பாளையத்தை சேர்ந்த 60 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


திருப்பூர் மாநகரில், லட்சுமி நகரில் 31 வயது ஆண், 81 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


ஆண்டிபாளையம் வீனஸ் கார்டனில் 26 வயது ஆண், 40 வயது ஆண், லட்சுமி நகர் 50 அடி ரோட்டில் 85 வயது ஆண், காலேஜ் ரோடு எல்.ஐ.சி., காலனியில் 52 வயது ஆண், 15 வேலம்பாளையத்தில் 55 வயது ஆண், 29 வயது ஆண், 26 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


மாரப்ப கவுண்டர் வீதியில் 31 வயது ஆணுக்கு தொற்று உறுதி, 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் 27 வயது பெண், 55 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. அனுப்பர்பாளையத்தில் 46 வயது ஆண், காங்கயம் ரோடு, விஜயாபுரம், சுப்புலட்சுமி நகரில் 43 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


மேலும் ராயபுரத்தில் 50 வயது ஆண், காலேஜ் ரோடு, திருவிக நகரில் 28 வயது பெண்ணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.


காங்கயம் புலிமா நகரில் 6 மாத பெண் குழந்தைக்கு தொற்று உறுதியாகி உள்ளது 


மங்கலம் சுரபி கார்டனில் 34 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. 


பல்லடம் சென்னிமலை பாளையத்தில் 34 வயது பெண், 


அவிநாசி குப்பாண்டம்பாளையம், மகாராஜா கல்லூரியில் 22 வயது ஆண், அதே கல்லூரி எதிரில் 19 வயது ஆண், 21 வயது ஆண், 33 வயது ஆண், அவிநாசி மாணிக்கம் வீதியில்  26 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


இதில் 17 பேர் மாநகராட்சி, அவிநாசியில் 5 பேர், உடுமலை, காங்கயம், பல்லடம், மங்கலத்தில் தலா ஒருவரும் என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதில் 7 பேர் பெண்கள்; 19 பேர் ஆண்கள்.


திருப்பூர் தாராபுரம், ரெட்டவலசு ரோட்டில் உள்ள பெரியார் நகரை சேர்ந்த 68 வயது நபர் உடல் நிலை சரியில்லாத நிலையில் உயிரிழ்ந்தார். அவர் இறப்புக்கு பின்னர் பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


Previous Post Next Post