பட்டையை கிளப்பும் சில்5 அப்ளிகேஷன்... டிக் டாக் பதிலாக புது செயலி... திருப்பூர்காரரின் புதிய சாதனை

டிக் டாக் மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்திய திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள்.இந்தியா சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல்போன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது இதன் காரணமாக இத்தகைய புதிய செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.டிக் டாக் செயலி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக பல செயலிகள் இருக்கும் பொழுதும் அவை அளவிற்கு சோபிக்கவில்லை. தற்பொழுது டிக் டாக் இருக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல செயலிகளும் அந்த இடத்தை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி நண்பர்கள் இணைந்து டிக் டாக் இருக்கு மாற்றான சில்5 chill5 என்ற  செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார்(26), சௌந்தரகுமார் (28), சந்தீப் (25), கோகுல் (25), வெங்கடேஷ் (25) என்ற 5 பேரும் இணைந்துதான் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு டிக் டாக் போலவே காட்சி தரும் இந்த செயலி டிக் டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்கள் கொண்டுள்ளது.தமிழக இளைஞர்கள் வடிவமைத்து என்பதால் இதனை மெருகேற்ற பயனாளர்கள் கொடுக்கும் புகார்கள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில் தற்போது வரை 1000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயலிக்கான சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது எனவே தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.