தமிழ்நாட்டில் 6,472 பேருக்கு கொரோனா... 88 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று புதிய உச்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உள்ளது.


இதில் 52,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,36,793 பேர் குணமடைந்து வீடு சென்று உள்ளனர்


இன்று புதிதாக 88 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 3,232 பேர் தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர்.


இன்று மட்டும் சென்னையில் 1,336 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 11 பேர் இறந்துள்ளனர். 


விருதுநகரில் 480, திருவள்ளூர் 416,தூத்துக்குடி 415 என சென்னை அல்லாத மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.