தமிழ்நாட்டில் 6,986 பேருக்கு கொரோனா.. 85 பேர் மரணம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. என்றைக்குத்தான் உச்சமடைந்து எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும் என தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உ ள்ளனர். 


இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 6,986 ஆக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,13,723 ஆக உள்ளது.


இதில் 52,273 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


சென்னையில் மட்டும் 1,155 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.