திருப்பூர் மாநகராட்சி இடத்தில் செயல்பட்ட பிரேமா பள்ளி இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக் கட்டிடம் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.


வீடியோ இதோ:



 




திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோவில் அருகில் 1970 ஆம் ஆண்டு திருப்பூர் நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது. 1975 ஆம் ஆண்டு காய்கறி மார்க்கெட் கட்டிடத்துடன் தனியார் பள்ளி நடத்த பிரேமா ரவி என்பவருக்கு 150 ரூபாய் குத்தகைக்கு விடப்பட்டது.

அதில் அவர் பிரேமா நர்சரி பள்ளி என்ற பள்ளியை நடத்தி வந்தார்.


பின்னர் 1982 ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் பள்ளிக்கடிடத்தை காலி செய்ய மாநகராட்சி கோரியபோது  பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்து நீதி மன்றத்தை அணுகியது.

 

இதைதொடர்ந்து அந்த வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

 

அதனடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சுப்பிரமணி, தங்கவேல்ராஜ், மற்றும் உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கட்டிடத்தை காலி செய்து இடித்து அகற்றினர். 

 

இதன்மூலம் 38 ஆண்டுகளுக்கு பிறகு  ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி சொத்து மீட்கப்பட்டு உள்ளது.

 

வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி உடன் இருந்தனர். திருப்பூர் வடக்கு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் 30 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Previous Post Next Post