64 பேர் இன்று மரணம்...4,329 பேருக்கு தொற்று... தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 2,082 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் 2,247 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  


நோய் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் உயிரிழந்து உள்ளனர் . 


மொத்தமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்த்து 721  ஆக உள்ளது. இதில் 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 2,357 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மொத்தமாக இதுவரை 58,378 பேர் குணமாகி வீடுகளுக்கு சென்று உள்ளனர்.


சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 287 பேர், செங்கல்பட்டில் 330 பேர், திருவண்ணாமலையில் 151 பேர், திருவள்ளூர் 172 பேர், வேலூரில் 145 பேர் என சென்னை அல்லாத மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து உள்ளது.


தமிழ்நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,385ஆனது.