88 பேர் பலி... 6,972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 7 ஆயிரம் பாதிப்பு என்ற எண்ணிக்கைக்கு ஒரு சில எண்கள் மட்டுமே குறைவாக உள்ளது. 


இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரையிலான மொத்த தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,27,688 ஆக உள்ளது. 


இதில் 54,896 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 1,66,956 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். 


இன்று மட்டும் 88 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை  3,659 ஆக உள்ளது.


சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு பாதிப்பு ஏற்ப்பட்டு உள்ளது.