திருப்பூர் தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இலவச முதலுதவி மையம் துவக்கம் 

பல்லடம் வட்டம், பொங்கலூர் அருகே உள்ள தேவணம்பாயைத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்ற அலுவகத்தில் சுவாமி விவேகானந்தா முதலுதவி மையம் தொடங்கப்பட்டது.
இதைப்பற்றி  மன்ற செயலாளர் சிவக்குமார் தெரிவிக்கையில் தற்போதைய நோய் தொற்று காலத்தில் சிறு சிறு விசயங்களுக்கு மருத்துவமனை செல்கின்றனர். அங்கு அதிக கூட்டத்தின் காரணமாக மேலும் தொற்றுக்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.


அதனை  குறைக்கும் விதத்தில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்ய எங்கள் மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக  இரத்த அழுத்த சோதணை கருவி, சர்க்கரை அளவு கருவி, உடல் எடை, உயரம் உள்ளடக்கிய பி.எம்.ஐ சோதணை, உடல் வெப்பநிலை கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், நெபுலைசர்  போன்ற சுமார் 20000 ரூபாய்  மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கொண்டு  இலவச முதலுதவி மையம் தொடங்கியுள்ளோம். இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் பயனடைவார்கள். இந்த இலவச பரிசோதனை தொடர்ந்து வாரவாரம் நடைபெறும் என்று கூறினார்.


இந்நிகழ்வில் மன்ற செயலாளர் சிவக்குமார், துணை தலைவர் சந்தோஸ்குமார், துணை பொருளாளர் தமிழரசன், துணை செயலாளர் மதன்குமார்  மன்ற நிர்வாக குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். மருத்துவர் விஜயகுமார் பொதுமக்களுக்கு பரிசோதித்து ஆலோசணைகள் வழங்கினார்.