பெங்களூர் இரவுநேர ரயில் முன்மொழிவு... தென்னக ரயில்வே துறைக்கு நன்றி - நடராஜன் எம்.பி

கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பெங்களூர் இரவு நேர ரயில் மற்றும் தென்மாவட்ட மக்கள் பயன்பெரும் ரயில் சேவைக்கான முன்மொழிவை பரிந்துரைத்த தென்னக ரயில்வே துறைக்கு எம்.பி நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதர கோரிக்கைகைகளையும் உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும்.


தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ரயில் சேவை முக்கிய பங்கினை வகித்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கிற ரயில்நிலையமாகவும் கோவை இருந்து வருகிறது.


தொழில், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைக்காக  இதர மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் கோவை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரயில் சேவை இல்லாதிருப்பது குறித்து பலமுறை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.


மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலரும் ஒருங்கினைக்கப் பட்டு ரயில்வே போராட்டக்குழுவின் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.


இதில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை முதல் பெங்களூர் வரையிலான இரவு நேர ரயில் சேவை, கோவை -ராமேஷ்வரம், கோவை - திருநெல்வெலி எக்ஸ்பிரஸ், திருநெல்வெலி - மதுரை பயணிகள் ரயில் கோவைவரை நீட்டிப்பு, கோவை - தென்காசி, கோவை - துத்துக்குடி ஆகிய கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்தேன். இந்நிலையில் கோவை – பெங்களூர் இரவு நேர ரயில், கோவை -ராமேஷ்வரம், கோவை - திருநெல்வெலி எக்ஸ்பிரஸ், திருநெல்வெலி - மதுரை பயணிகள் ரயில் கோவைவரை நீட்டிப்பு ஆகியவற்றை தென்னக ரயில்வே டெல்லி ரயில்வே ஆனையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதை கோவை மக்களின் சார்பில் வரேவேற்கிறேன்.


கொரோனா காலத்தில் ரயில்களை இயக்குவதற்கு தாமதம் ஆனாலும், டில்லி ரயில்வே ஆணையம் உனடியாக தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ள பரிந்துரைகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் கோவை - தென்காசி, கோவை – துத்துக்குடி ஆகிய இரண்டு ரயில்களுக்கான கோரிக்கையை தென்னக ரயில்வே பரிந்துரை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான தேவையையும் கருத்தில் கொண்டு உடனடியாக டில்லி ரயில்வே ஆனையத்திற்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் மத்திய பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட மேங்களூர் கோயமுத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பது என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரையில் இது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஏற்புடையதல்ல உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தரைப்பாலம், ரயில்வே மேம்பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கவும், கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், பீளமேடு, சோமனுர், இருகூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய ரயில்நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் உடனடியாக பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். 


Previous Post Next Post