கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

கோத்தகிரி போக்குவரத்து காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது.கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த நீலகிரியில் இன்று நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது 450 நபர்களுக்கு மேலாக தொற்று ஏற்புட்டுள்ளதை தொடர்ந்து கோத்தகிரி போக்குவரத்து காவல் துறையினர் கிராமம் கிராமமாக சென்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகின்றனா.


இந்த நிகழ்வுகளில் கை கழுவும் முறை முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி கிருஷ்ணாபுரம்  பகுதியில் வசிக்கும் மக்களுக்க சானிடைசர் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம்  சுமார் 100 நபர்களக்க கோத்தகிரி போக்குவரத்து  காவல் துறை ஆய்வாளர் அவர்களால் வழங்கப்பட்டது.