ஆயிரப்பேரியில்  கலெக்டர் அலுவலகம்... பொதுமக்கள் மகிழ்ச்சி... திமுக பிடிவாதம் 
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் ஆயிரப்பேரி பகுதியில் கட்டுவது தொடர்பாக திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் சிலருடன் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தனர் அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆயிரப்பேரி பகுதியில் கட்ட தமிழக அரசு 119  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விட்டது எனவே அதனை இனி யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை தெரிவித்துள்ளார்.

 

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை  கடந்த 30  ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து கட்சியினரும் முன்வைத்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வாக்குறுதியாக தான் வெற்றிபெற்றால் தென்காசியை தலைமையிடமாக கொண்டு நிச்சயமாக தென்காசி மாவட்டம் உருவாக்க பாடுபடுவேன் என்று அறிவித்தார்

 

அதன்படி தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தமிழக சட்டமன்றத்தில் பேசிய கன்னிப் பேச்சில் தென்காசி தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினார்.

 

அதற்கு பதிலளித்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தென்காசி எம்.எல்ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கையை ஏற்று விரைவில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

அதன்பிறகு எடப்பாடி கே பழனிசாமி முதல்வரான பிறகும் தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்றத்திலும் நேரிலும் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வந்தார்.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் தென்காசி நகருக்கு வருகை தந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது அப்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆயிரப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான  வேளாண்மை  வித்து பண்ணை இருந்த சுமார் 35 ஏக்கர் நிலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட வேண்டுமென முதலமைச்சரிடம் தனது கோரிக்கையை முன்வைத்தார்.

 

 

அன்றுமுதல் திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஆயிரப்பேரி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டக் கூடாது என்று கோரி பல்வேறு போராட்டங்களை திமுக சார்பிலும் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பிலும்  நடத்தினார். ஆனாலும் தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆயிரப் பேரி பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்தே தீருவேன் என்று அறிவித்தார்.

 

 

அதனை எதிர்த்து பலமுறை திமுக சார்பிலலும் , திமுக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில் கடந்த 29.07.2020 அன்று தென்காசி எம்எல்ஏ எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் குறிப்பிட்ட ஆயிரப்பேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட 119 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் உடனடியாக திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார் ஆனால் அதற்கு திமுக கூட்டணி கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்..

மேலும் அவர்கள் அனைவரும் திமுக  மாவட்ட பொறுப்பாளர்  சிலபத்மநாதனிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை  விரைந்து கட்ட வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்தினால் நாங்கள் கலந்துகொள்வோம் ஆனால் அரசு திட் டத்தை தடுப்பதற்கு இடையூறு செய்வதற்கு நாங்கள் வர முடியாது என்று கூறி கூட்டத்தை புறக்கணித்தனர்.

 

ஆனாலும் திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன்  மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், திமுக எம்பி தனுஷ் குமார், திமுக நகர செயலாளர் சாதிர் ஆகியோரை அழைத்துக்கொண்டு கலெக்டரை சந்தித்து வழக்கம்போல் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை ஆயிரப்பேரியில் கட்டக்கூடாது என்று  மனு கொடுத்ததோடு அதனை வலியுறுத்தி பேசியுள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி‌கே. அருண்சுந்தர் தயாளன்  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆயிரபேரி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான  35 ஏக்கர் நிலத்தில் கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இந்த கட்டிடப் பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ 119 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்து விட்டது. எனவே அது பற்றி  இனிமேல் எந்த முடிவும் எடுக்க முடியாது.

 

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்டுவதற்கு தேவையான அரசுக்கு சொந்தமான இடம் வேறு எங்கும் இல்லை.எனவே ஆயிரப்பேரி பகுதியில்  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவே இதுபற்றி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். 

 

தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஆயிரப்பேரி பாட்டப்பத்து ஊர் பொதுமக்கள் என அனைவரும் திமுக மாவட்ட பொறுப்பாளரிடம் பலமுறை இது போன்ற வளர்ச்சித் திட்டங்களை திமுக சார்பில் நீங்கள் எதிர்க்கக் கூடாது என்று கூறியும் கேட்காத நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆயிரப்பேரியில் தான் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமையப்போகிறது என்று  உறுதியாக கூறியதை கேட்டு திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் வெளியேறியுள்ளனர்.

 

 இதைக் கேட்டு தென்காசி மாவட்ட பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் ஆயிரப்பேரி பாட்டப்பத்து  மத்தளம்பாறை குற்றாலம்  குடியிருப்பு காசிமேஜர்புரம் வல்லம்  உள்ளிட்டவர்கள் மட்டுமன்றி தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து தரப்பு மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.