நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை


நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த், ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா , அவைத்தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான  பரணி சங்கரலிங்கம், மாணவரணி செயலாளர் சிவந்தி மகாராஜன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post